தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்து ஈச்சம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட அக்ரஹாரம் கிராமத்தில் கடந்த ஐந்து வருடங்களாக சமூக சேவை செய்து வருகின்றது, இச்சவையை பாராட்டும் விதமாக, கோயமுத்தூர் பிரதர்ஹூட் இஹ்வான் ட்ரஸ்ட் (சகோதர அறக்கட்டளை) சார்பாக நமக்கு நாமே இஹ்வான் 2024 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி கோவை மாவட்டம் போத்தனூர் "பிஸி ஹாலில்" நடைபெற்றது இதில் தமிழகம் முழுவதும் இருக்கும் சமூக சேவை அமைப்புகள் வளர்ந்து வரும் தொழில் அதிபர்களை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் தர்மபுரி மாவட்டம் சார்ந்த டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற அமைப்பிற்கு சமூக சேவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் திரு.இஹ்வான்செரீப் தலைவர் (இஹ்வான் டிரஸ்ட் சகோதரர் அறக்கட்டளை) கோவை, முனைவர் ம.வாசிம்ராஜா (நிர்வாக இயக்குனர் E.M.M.குரூப்ஸ் கோவை) திரு. கிறிஸ்டி சகாயம் (நிர்வாக இயக்குனர் W.U.I.Tகோவை), டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாக தலைவர் நா. சின்னமணி, மற்றும் சமூக சேவையாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கலந்து கொண்டனர் இறுதியில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.