Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில்‌ நான்கு குழந்தை திருமணம்‌ தடுத்து நிறுத்தம்.


தருமபுரி மாவட்டத்தில்‌ நான்கு குழந்தை திருமணம்‌ நடைபெறவுள்ளதாக தருமபுரி குழந்தைகளுக்கான இலவச அழைப்பு எண்‌ 1098 என்ற எண்ணிற்கு புகார்‌ வரப்பெற்றதின்‌ பேரில்‌, நேரில்‌ சென்று களவிசாரணை மேற்கொள்ளப்பட்டதில்‌,  

  1. நல்லம்பள்ளி வட்டம்‌, கம்மம்பட்டி கிராமத்தைச்‌ சேர்ந்த சித்ரா கோவிந்தராஜ்‌ தம்பதிகளின்‌: மகள்‌ கவிதா (பெயர்‌ மாற்றப்பட்டுள்ளது) என்ற 17 வயது சிறுமிக்கு (21.01.2024) இன்று திருமணம்‌ நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  2. தருமபுரி வட்டம்‌, அதகபாடி கிராமத்தைச்‌ சேர்ந்த நதியா சக்திவேல்‌ தம்பதிகளின்‌ மகள்‌ திவ்யா (பெயர்‌ மாற்றப்பட்டுள்ளது) என்ற 16 வயது சிறுமிக்கு (21.01.2024) இன்று திருமணம்‌ நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  3. தருமபுரி வட்டம்‌, கொண்டம்பட்டி கிராமத்தைச்‌ சேர்ந்த சென்னம்மாள்‌ அன்பழகன்‌: தம்பதிகளின்‌ மகள்‌ பிரியா (பெயர்‌ மாற்றப்பட்டுள்ளது) என்ற 17 வயது சிறுமிக்கு (21.01.2024) இன்று திருமணம்‌ நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  4. அரூர்‌ வட்டம்‌, வடுகப்பட்டி கிராமத்தைச்‌ சேர்ந்த மகாலட்சுமி நிவாஸ்‌ தம்பதிகளின்‌ மகள்‌: ரம்யா (பெயர்‌ மாற்றப்பட்டுள்ளது) என்ற 16 சிறுமிக்கு நாளை (22.01.2024) திருமணம்‌: நடைபெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  
தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அவர்களின்‌ அறிவுறுத்தலின்படி, இன்று (21.01.2024) நடைபெறவிருந்த நான்கு குழந்தை திருமணங்களை மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள்‌, காவல்துறையினர்‌, வருவாய்‌ துறையினர்‌ மற்றும்‌ ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள்‌ ஆகியோர்கள்‌ இணைந்து மேற்கண்ட நான்கு குழந்தை திருமணங்களையும்‌ தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

மீட்கப்பட்ட சிறுமிகள்‌ அனைவரும்‌ குழந்தைகள்‌ நல குழும வரவேற்பு மையத்தில்‌ தங்க வைக்கப்பட்டுள்ளனர்‌.  மேற்கண்ட நான்கு குழந்தை திருமணங்கள்‌ குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ மாவட்டத்தில்‌ உள்ள 18 வயது ஓபூர்த்தியடையாத சிறுமிகளுக்கும்‌, 21 வயது பூர்த்தியடையாத சிறுவர்களுக்கும்‌ பெற்றோர்கள்‌ எவரேனும்‌ திருமணம்‌ ஏற்பாடு செய்யதாலோ அல்லது திருமணம்‌: செய்து வைத்தார்கள்‌ என கண்டறியப்பட்டால்‌ அவர்கள்‌ மீது காவல்துறை மூலம்‌ சட்ட ரீதியாக. கடுமையான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌.


மேலும்‌, இதுபோன்ற இளம்‌ வயது திருமணம்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கு எதிரான பாலியல்‌ வன்கொடுமை, குழந்தை தொழிலாளர்கள்‌, பள்ளி செல்லா குழந்தைகள்‌ போன்ற குழந்தைகளுக்கு எதிரான செயல்கள்‌ நடைபெறுவதை. கண்டறியப்பட்டால்‌ உடனடியாக குழந்தைகளுக்கான இலவச அழைப்பு எண்‌.1098 என்ற எண்ணிற்க்கோ அல்லது மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ செயல்படும்‌ மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலக தொலைபேசி எண்‌.04342- 232234 என்ற எண்ணிற்க்கோ புகார்‌ தெரிவிக்க வேண்டும்‌ என்று தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள்‌ தனது செய்திஅறிக்கையில் தெரிவித்துள்ளார்‌.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies