மனைவியின் பெற்றோர் திருமண செலவுக்கு நஷ்ட ஈடு கேட்டு வெங்கடாஜலபதியின் பெற்றோரிடம் நிலத்தை வாங்கி தருமாறு கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த வெங்கடாஜலபதி தனது நிலத்தையும் கேட்டு வருவதால் விரக்தியில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஓமல் நத்தம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியே சென்ற வெங்கடாஜலபதி வீடு திரும்பவில்லை. இந்நிலையில் பாப்பாரப்பட்டி அருகே மலையூர் கிராமத்தில் மலைப்பகுதியில் புதர்களுக்கு நடுவே ஒரு வாலிபர் பிணமாக கிடப்பதாக தகவல் தெரிந்தது. சம்பவ இடத்துக்கு வெங்கடாஜலபதியின் உறவினர்கள் சென்று பார்த்தனர்.
அங்கு பிணமாக கிடந்தது வெங்கடாஜலபதி என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பாப்பாரப்பட்டி போலீசார் வெங்கடாசலபதி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கூலி தொழிலாளி வெங்கடாஜலபதி மர்மமான முறையில் இறந்தது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

