Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 12,42,825 வாக்காளர்கள் உள்ளனர். - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை - 2024 மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்கள்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை - 2024 மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (22.01.2024) வெளியிட்டார்கள். இறுதி வாக்காளர் பட்டியலை வெளிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சிறப்பு சுருக்க திருத்தம் -2024 ல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம்/திருத்தம் தொடர்பாக 27.10.2023 முதல் 09.12.2023 வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.  4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.  சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகளை தேர்தல் ஆணையத்தினால் நியமனம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் அவர்கள் ஆய்வு கூட்டம் மற்றும் கள ஆய்வு செய்து மேற்பார்வை செய்துள்ளார்.


27.10.2023 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 6,21,822 ஆண்களும், 6,05,319 பெண்களும், 161 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 12,27,302 நபர்கள் வாக்காளர்களாக இருந்தனர். சிறப்பு சுருக்கமுறை திருத்தில் பெயர் சேர்த்தல் (படிவம்-6) தொடர்பாக 26,296 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 25,634 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 662 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. 


பெயர் நீக்கம் (படிவம் -7) தொடர்பாக 10,353 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 10,115 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 238 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. திருத்தம்/ முகவரி மாற்றம் (படிவம்-8) தொடர்பாக 8,828 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 8,239 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 589 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் மொத்தம் 45,477 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 43,988 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1,489 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.


22.01.2024 இன்று  வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி சட்டமன்ற தொகுதி வாரியாக, இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு. 


57-பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 1,20,301 ஆண் வாக்காளர்களும், 1,17,857 பெண் வாக்காளர்களும், 19 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,38,177 வாக்காளர்கள் உள்ளனர்.


58-பென்னகாரம் சட்டமன்ற தொகுதியில் 1,26,596 ஆண் வாக்காளர்களும், 1,18,591 பெண் வாக்காளர்களும், 8 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,45,195 வாக்காளர்கள் உள்ளனர். 


59-தருமபுரி சட்டமன்ற தொகுதியில் 1,30,757 ஆண் வாக்காளர்களும், 1,28,419 பெண் வாக்காளர்களும், 98 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,59,274 வாக்காளர்கள் உள்ளனர்.


60-பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1,28,495 ஆண் வாக்காளர்களும், 1,27,813 பெண் வாக்காளர்களும், 14 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,56,322 வாக்காளர்கள் உள்ளனர்.


61-அரூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,22,113 ஆண் வாக்காளர்களும், 1,21,724 பெண் வாக்காளர்களும், 20 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,43,857 வாக்காளர்கள் உள்ளனர்.


தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதியில் 6,28,262 ஆண் வாக்காளர்களும், 6,14,404 பெண் வாக்காளர்களும், 159 இதர வாக்காளர்களும் என மொத்தம் 12,42,825 வாக்காளர்கள் உள்ளனர்.


கடந்த 27.10.2023 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 12,27,302 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். சிறப்பு சுருக்க திருத்தத்திற்கு பின்பு இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியலில் மொத்தம் 12,42,825 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை விட இறுதி வாக்காளர் பட்டியலில் 15,523 வாக்காளர்கள் கூடுதலாக இடம்பெற்றுள்ளனர்.

 

சிறப்பு சுருக்கமுறை திருத்தம்/தொடர் திருத்தத்தில் படிவம்-6 (பெயர் சேர்த்தல்) மற்றும் படிவம்-8 (திருத்தல் / முகவரி மாற்றம்/ நகல் அட்டை) அளித்துள்ள அனைவருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களின் முகவரிக்கே நேரடியாக புதிய வாக்காளர் அடையாள அட்டை பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். பொதுமக்கள் வாக்காளர்களாக பதிவு செய்வதற்கு ONLINE (voters.eci.gov.in மற்றும் Voter Helpline app)  வழியாகவோ அல்லது வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலோ தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.  


எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024-ல் வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்புவரை விண்ணப்பம் செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.  இவ்வாறு பதிவு செய்த அனைத்து வாக்காளர்களும் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிக்கலாம், என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


இந்நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கோவிந்தசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி.கீதாரணி (தருமபுரி), திரு.வில்சன் ராஜசேகர் (அரூர்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது திருமதி.பழனிதேவி, தேர்தல் வட்டாட்சியர் திரு.அசோக்குமார் உள்ளிட்ட அனைத்து வட்டாட்சியர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் மற்றும் அங்கிகாரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies