விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா மேற்கு மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் ஒன்றிய செயலாளர் திருலோகன் நகர செயலாளர் சொக்கன் ஆகியோர் தலைமையில் பத்தலஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஊர் எஜமான் ராஜீவ்காந்தி என்பவர் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் கடந்த 9.1.2024 ம் தேதி இரவு மொரப்பூர் அருகே உள்ள எலவடையை சேர்ந்த பாஜக ஒன்றிய செயலாளர் ராஜசேகர் என்பவர் பத்தலஹள்ளி முனிரத்தினம் என்பவரின் தூண்டுதலின்பேரில் மொரப்பூர் விஷ்ணுபிரசாத் வெ.புதூரை சேர்ந்த கணேசன் மணி ஆகியோர் பத்தலஹள்ளி ஊரின் மையப் பகுதியில் சென்று குடிபோதையில் தகாத வார்த்தையாலும் ஆபாச வார்த்தைகளாலும் அங்குள்ள பொதுமக்களை மிரட்டியுள்ளனர்.
மேலும் நீங்கள் பிஜேபியில் சேருங்கள் என்றும் சாதி பெயரை சொல்லியும் திட்டியதாகவும் இரவு நேரத்தில் அத்துமீறி ஊருக்குள் நுழைந்து மிரட்டல் விடுத்த பாஜக ஒன்றிய செயலாளர் ராஜசேகர் மற்றும் முனிரத்தினம் கணேசன் மணி விஷ்ணுபிரசாத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பத்தஹள்ளி ஊர் எஜமான் ராஜீவ்காந்தி என்பவர் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலிசார் விசாரித்து வருகின்றனர்.
இதில் வழக்கறிஞர் பிரிவு துரைவளவன் வைதமிழ்சின்னதம்பி தொகுதி செயலாளர் ராஜேந்திரன் ராஜா குமார் இளையராஜா ஊர் தலைவர்கள் செல்வக்குமார் ஆதிமூலம் கோட்டிஸ்வரன் செல்வம் அண்ணாமலை பூமணி சகாதேவன் திருப்பதி ஆகியோர் உடனிருந்தனர்.
.gif)

