Type Here to Get Search Results !

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு "சட்டமன்ற நாயகர் - கலைஞர்" கருத்தரங்கம்.


தருமபுரி அரசு கலைக்கல்லூரி மற்றும் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு "சட்டமன்ற நாயகர் - கலைஞர்" கருத்தரங்கம் விழாக் குழு இணைத்தலைவர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் துணைத் தலைவர் திரு.கு.பிச்சாண்டி அவர்கள் தலைமையில் இன்று (12.01.2024) நடைபெற்றது. 

விழா குழு உறுப்பினர் / சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர் திரு.சி.ஞானசேகரன் அவர்கள் கருத்தரங்க பேருரையாற்றினார்கள். இக்கருத்தரங்கங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் கருத்தரங்க சிறப்புரை ஆற்றினார்கள். பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். இக்கருத்தரங்கில் சட்டமன்ற பேரவைச் செயலக கூடுதல் செயலாளர் திரு. பா. சுப்பிரமணியம் சிறப்புரையாற்றினார்கள். 


மேலும், தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர். கோ.கண்ணன் வரவேற்புரையாற்றினார்கள். இக்கருந்தரங்குகளில் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் துணைத் தலைவர் திரு.கு.பிச்சாண்டி அவர்கள் பேசியதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி, முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் விதமாக மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.


இந்நிகழ்ச்சிகளை நடத்துவதெற்கென தமிழ்நாடு அரசால் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒன்றான “சட்டமன்ற நாயகர்-கலைஞர்” என்ற குழு மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சட்டமன்ற நாயகர் - கலைஞர் என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது.


அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் இன்றைய தினம் தருமபுரி அரசு கலைக்கல்லூரி மற்றும் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இக்கருத்தரங்கங்கள் நடைபெறுகிறது. 


முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்தும், எதிர்கட்சி தலைவரின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்தும் பேசினார்கள். குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் எதிர்கட்சி தலைவர்களின் கோரிக்கைகளில் ஒன்றான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தினை செயல்படுத்தி, பொதுமக்களின் குடிநீர் தேவையினை நிறைவேற்றி தந்துள்ளார்கள். அதேபோல், வேலூர் மாவட்டத்தின் குடிநீர் தேவைக்கான திட்டத்தினையும் நிறைவேற்றி தந்துள்ளார்கள்.


எளிய குடும்பத்தில் பிறந்து, படித்து, தம் பேச்சாற்றல் மூலம் தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அதேபோல் தன் பேச்சாற்றால் மூலம் திராவிட கழகத்தின் தலைவராகவும், தமிழ்நாட்டின் 5 முறை முதலமைச்சாராகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் இருந்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சாரக இருந்தபோது சட்டமன்ற நடவடிக்கைகளில் தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து, உடனுக்குடன் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்.


முத்தமிழறிஞர் கலைஞர் இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழ்நாட்டில் 1989- ஆம் ஆண்டு பெண்களுக்கு சொத்துரிமை சட்டத்தை நிறைவேற்றினார்கள். அதன்பின், 15 ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம் இந்தியா முழுவதும் ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் பொதுமக்கள் பேருந்துகளை எளிதாக பயன்படுத்தும் வகையில், பேருந்துகளை பொது உடைமையாக்கப்பட்டதும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிகாலத்தில் தான். தமிழ்நாட்டிலிருந்து, தமிழ் வழியில் பயின்று, தாம் பெற்ற கல்வியால் தான் சந்திராயன் - 3 திட்டத்தில் பணியாற்றிய வீரமுத்துவேல் மற்றும் ஆதித்யா திட்டத்தில் பணியாற்றிய சாந்தி ஆகியோர் விஞ்ஞானிகளாவும், சாதனையாளர்களாகவும் மாறி உள்ளனர். 


எனவே, இங்கு உள்ள மாணவ, மாணவியர்கள் அனைவரும் நல்ல முறையில் கல்வி பயின்று எதிர்காலத்தில் எழுத்தாளர்களாக, பேச்சாளராக, அதிகாரிகளாக, நிறுவன தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் தலைவராக உருவாகி, வாழ்வில் முன்னேறி, சாதனையாளராக, தங்கள் வாழ்வில் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன், என மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் துணைத் தலைவர் திரு.கு.பிச்சாண்டி அவர்கள் பேசினார்கள்.


”நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது” என்ற தலைப்பில் மாவட்டம் முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் இருபிரிவுகளாக பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதல் 5 இடங்களை பெற்ற மாணவர்கள் இன்றைய தினம் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பேசினர். அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, கல்லூரி மற்றும் பள்ளி ஆகிய இருபிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் துணைத் தலைவர் திரு.கு.பிச்சாண்டி அவர்கள் வழங்கினார்கள்.


இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, சட்டமன்ற பேரவை செயலக இணை செயலாளர் திரு.மு.கருணாநிதி, கல்லூரி கல்வித்துறை மண்டல இணை இயக்குநர் முனைவர். நா. இராமலட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஐ.ஜோதிசந்திரா, தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி.மா.இலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க்கல்வி அலுவலர்) திருமதி.மான்விழி, மாநில கைம்பெண் நலவாரிய உறுப்பினர் திருமதி.ரேணுகாதேவி உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies