ஜனவரி 26ல் திருச்சி சிறுகனூரில் நடைபெறும் வெல்லும் சனநாயக மாநாட்டிற்கு தர்மபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி கடத்தூர் கம்பைநல்லூர் மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் மாநாடு சரியாக பிற்பகல் 3 மணியளவில் தொடங்குகிறது.
இம்மாநாட்டில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜீன்கார்கே சிபிஐ(எம்)அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி. சிபிஐ தேசிய பொதுச்செயலாளர் து.ராஜா திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. மதிமுக தலைவர் வைகோ.இ.யூ.மு.லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் மமக தலைவர் ஜவாஹிருல்லா கொ.ம.தே.க. தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆம்ஆத்மி மாநில தலைவர் வசீகரன் தவாக தலைவர் தீ.வேல்முருகன் மாநில செயலாளர் சிபிஐ (எம்எல்) பழ.ஆசைதம்பி பொதுச்செயலாளர் சிபிஐ(எம்எல்) விடுதலை திபங்கர்பட்டாச்சார்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
எனவே திருச்சி மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்கள் அரூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட வாகனங்கள் ஜன 26ம் தேதி காலை 10மணிக்கு கச்சேரிமேட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை அருகே வரவேண்டும் பாபிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட வாகனங்கள் பேருந்து நிலையம் எதிரே உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை அருகே இருந்து புறப்பட்டு சாமியாபுரம் கூட்டோடில் நின்று அரூர் பேருந்துகள் வந்தபின் அனைவரும் ஒன்றுசேர்ந்து புறப்படவேண்டும் வருகின்ற தொண்டர்கள் மதுஅருந்தி விட்டோ, செல்லும் வழியில் இரைச்சல் எழுப்பவோ கூடாது இடையில் வாகனங்களை நிறுத்தி உணவு விடுதிகளில் உணவு உண்ண கூடாது தங்களுக்கு தேவையான உணவுகளை தயார் செய்து தாங்கள் வரும் வாகனங்களிலேயே உணவருந்தி விட்டு மாநாட்டிற்கு வரவேண்டும்.
இம்மாநாடு வெற்றி பெற தருமபுரி கிழக்கு மாவட்ட தொண்டர்கள் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும் என தனது அறிக்கையில் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா கூறியுள்ளார்.
.gif)

.jpg)