Type Here to Get Search Results !

அரூர் அருகே கள்ளக்காதல் தொடர்பாக தகராறு பெண் கத்தியால் குத்தி கொலை, விவசாயி கைது, போலீசார் விசாரணை.


தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பேரெரிபுதுரை அடுத்த தேக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம் (44)கட்டிட மேஸ்திரியான இவருக்கு ஜெயமணி  (33) என்ற முதல் மனைவியையும் செல்வி என்ற இரண்டாவது மனையும் உள்ளனர்.

இந்நிலையில் ஜெயமணிக்கும் பாறைவளவு கிராமத்தை சேர்ந்த விவசாயி மனோகரன் (46) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது, இது குறித்து தகவல் அறிந்த ராஜாராம் தனது முதல் மனைவி ஜெயமணியை கண்டித்துள்ளார். இந்த நிலையில் ஜெயமணிக்கு மேலும் சிலருடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது.


இது குறித்து தகவல் தெரியவந்தது சம்பவத்தன்று ஜெயமணி தனது வீட்டில் இருந்து தேக்கல்பட்டி சூரியக்கடை வழியாக நடந்து சென்றுள்ளார்,  அப்போது அங்கு வந்த மனோகரன் நீ  சிலருடன் தொடர்பு வைத்திருக்கிறாய் என்று கூறி தகராறில்  ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த மனோகரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெயமணி கழுத்து  மார்பு பகுதியில் சராமாரியாக  குத்தினார் இதில் ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.


பின்னர் மனோரன்  அங்கிருந்து தப்பி ஓடி விட்டார், இந்த சம்பவம் குறித்து ராஜாராம் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்று ஜெயமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மனோரனை கைது செய்தனர்  இச்சம்பவத்தால்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies