தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி கடைவீதி நெடுஞ்சாலையில் ஸ்தூபி மைதானம் முதல் வட்டார வளர்ச்சி அலுவகம் வரை வாகனங்கள் சீராக செல்ல சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. இந்த சென்டர் மீடியன் ஓரம் பல மாதங்களாக மண் குவியல் சேர்ந்து வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து இடையூறு ஏற்பட்டு வருகிறது, இதனால் அடிக்கடி இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்க்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், கல்குவாரி கனரக வாகனங்கள் அதிக பாரம் ஏற்றி செல்லும் போது சென்டர் மீடியன் ஓரம் உள்ள மண்துகள்கள் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்க்கு மண் புழுதிபறக்கிறது. இதனல் எப்பொழுதும் பரபரப்பாக உள்ள சாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் சென்டர் மீடியன் ஓரம் உள்ள மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.