Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (22.01.2024) நடைபெற்றது. இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு அதீத முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். 

அந்த வகையில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெறப்பட்டு, தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.


இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 494 மனுக்கள் வரப்பெற்றன.


பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள். இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 1 நபருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள். 


இதனைத் தொடர்ந்து, தேசிய பெண் குழந்தைகள் தினம் வருகின்ற 24.01.2024 அன்று கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு இன்று மாவட்ட சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் உறுதி மொழி ஏற்கப்பட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் தொடர்பான விழிப்புணர்வு செல்பிபாய்ண்ட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சுயபுகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.


இந்நிகழ்வுகளின் போது குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக திரு.கௌரவ் குமார் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், துணை ஆட்சியர் பயிற்சி திரு.செந்தில்குமார், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சையது ஹமீத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வி.கு.மிரியாம் ரெஜினா, ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.சாகுல் அமீத், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.ஆ.செல்வம், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. பவித்ரா, தருமபுரி வட்டாட்சியர் திரு.ஜெயசெல்வம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies