Type Here to Get Search Results !

விவசாயத்திற்கு நீர்நிலைகளின் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மைச் சட்டம் 2000 (சட்டம் எண் 7, 2001)-ன்படி நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளதால் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சின்னாறு உபவடிநிலத்தில் உள்ள அணைகள், அணைகட்டுகள் மற்றும் ஏரிகளுக்கு புதியதாக நீரினைப் பயன்படுத்துவோர் சங்கப் பகுதியாக வரையறுத்து அறிவிக்க படிவம்-| (விதி 3(1))-யின் படி மற்றும் படிவம் - || (விதி 3(3))-யின்படி தருமபுரி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்: 11, நாள்: டிசம்பர் 5, 2023, அன்று வெளியிடப்பட்டது. மேலும் நில உரிமையாளர் பட்டியல் படிவம்- V மற்றும் வாக்காளர் பட்டியல் படிவம்-V-A -வை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கிடைக்கும் என்றும் சம்மந்தப்பட்ட ஆயக்கட்டுதாரர்கள் அவரவர் பெயரைச் சேர்ப்பதற்கு மறுப்பு தெரிவித்தல் படிவம்- VI (விதி 4(3) காண்க). 

பெயரைச் சேர்க்க கோரும் படிவம் - VII (விதி 4(3) காண்க) மற்றும் வாக்காளர் பட்டியலிலுள்ள பெயரை நீக்குவதற்கான படிவம் -VIII (விதி 4(3) காண்க) படி ஆயக்கட்டுதாரர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies