தர்மபுரி மாவட்டம் 2023 24ம் கல்வியாண்டிற்கான இந்தியாவின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கடத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட. ஒடசல்பட்டி ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி மாவட்டத்தில் சிறந்த அரசு தொடக்கப் பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது.
அப்பள்ளிக்கு தர்மபுரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி . சாந்தி அவர்கள் மாவட்ட கல்வி அலுவலர் (அரூர் ) திரு அ.இஸ்மாயில் மற்றும் கடத்தூர் வட்டார கல்வி அலுவலர்கள் திரு.மகேந்திரன், திரு.முருகன் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளிக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கு. மனேஷ்குமார், மற்றும் உதவி ஆசிரியர்கள் சி. ஆறுமுகம், ரா. புவனா ஆசிரியர்களை பாராட்டி சான்றுகள் வழங்கப்பட்டது.
.gif)

