தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்துள்ள செங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 75 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு அப்பள்ளியின் தலைமையாசிரியர் மா. பழனி தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்நம் நாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் அனைத்து மக்களாலும் ஒற்றுமையுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
நாட்டு விடுதலைக்காகவும் அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்காகவும் அரும்பாடுபட்ட தலைவர்களை நாம் நினைவு கூற வேண்டும். சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இணிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, ராஜேஸ்வரி, ரேக்கா மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
.gif)

