தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே தொன்னகுட்டஅள்ளி கிராமத்தில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தொன்னகுட்ட அள்ளி கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ராமர் கோவிலின் படத்தை திறந்து வைத்து சிறப்பு பூஜை செய்தனர். இந்த நிகழ்வில் ராமருக்கு 11 வகையான விளக்குகள் ஏற்றப்பட்டு பூக்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பித்து ஜெய்ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீ வால் முகி என கோசமிட்டு கொடியேற்றப்பட்டது.
அதன் பின்னர் ஆறு வகையான பொங்கல் வைத்து ராமர் படத்திற்கு சாமி தரிசனம் செய்தனர். இறுதியில் பட திறப்பு விழாவிற்கு வந்த கிராம மக்களுக்கு பொங்கல் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று மாலை தொன்னகுட்டஅள்ளி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் விளக்கேற்றி ராமர் வருகையை கொண்டாடுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
.gif)

