தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணையத்தின் தர்மபுரி பிரிவின் சார்பாக இந்திய விளையாட்டு போட்டிகள் 2023 நடைபெறுவது சார்ந்து மாணவ மாணவிகளின் பல்முகத் திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி நடைபெற்றது, முன்னதாக போட்டிகளின் ஒருங்கிணைப்பாளரும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனருமான முனைவர் கு. பாலமுருகன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் கோ கண்ணன் அவர்கள் தலைமையேற்று போட்டிகளை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் திருமதி சாந்தி அவர்கள் கலந்து கொண்டு கேலோ இந்தியா போட்டிகள் குறித்த விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.
போட்டிகளுக்கு வரலாற்று துறை பேராசிரியர்கள் திரு ராஜாராம், முருகன், ஆங்கிலத்துறை திரு ரவிச்சந்திரன் ஆகியோர் நடுவர்களாக இருந்து நடத்திக் கொடுத்தனர். பேராசிரியர்கள் முனைவர் பிரபாகரன் கிருபாகரன், முனைவர் கே விஜய தேவன், NSS உதவி திட்ட அலுவலர் முனைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இன்று வெற்றி பெறும் முதல் மூன்று மாணவ மாணவிகளுக்கு வருகின்ற 12-91-2024அன்று சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தர்மபுரி பிரிவின் சார்பாக வழங்கப்படும், இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்