திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளதால் இதுகுறித்து ஒருங்கிணைந்த திமுக மாவட்ட செயலாளர்கள் தடங்கம்.பெ.சுப்ரமணி மற்றும் பி.பழனியப்பன் ஆகியோர் கூட்டறிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளனர், அதில் மத நல்லிணக்கத்தின் அடையாளமான அண்ணல் காந்தியடிகள் அவர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜனவரி -30 ஆம் நாளை, நாடு முழுவதும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை யொட்டி மாண்புமிகு கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களின் ஆலோசனைப்படி ஜனவரி -30 காலை 10.00 மணி அளவில் தருமபுரி நான்கு ரோடு அண்ணா சிலை முன்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அதுசமயம் ஒருங்கினைந்த தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுகழக இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக தோழர்கள் திரளாக கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். என அதில் குறிப்பிட்டுள்ளது.