Type Here to Get Search Results !

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி.


பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த கால்நடை வளர்ப்பு குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி பாப்பம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சியை பாப்பிரெட்டிப்பட்டி வேளாண்மை துறையின் சார்பாக வேளாண்மை அலுவலர் திருமதி ஜீவகலா அவர்கள் தொடங்கி வைத்தார், பயிற்சி தொடங்கி வைத்து அவர் பேசுகையில் உயிர் உங்களை பயன்படுத்துவதனால் உண்டாகும் நன்மைகள் குறித்தும், உயிர் உரங்களை  பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார் விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார், மேலும் இப் பயிற்சியில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக உதவி கால்நடை மருத்துவர் திரு விஜயகுமார் அவர்கள் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த கால்நடை வளர்ப்பு முறையில் நோய் தடுப்பு மேலாண்மை , தீவன  மேலாண்மை, மற்றும் இளங்கன்று பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். 


மேலும்  மேலும் இப்  பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர்கள் திரு சுரேஷ் மற்றும் திருநாவுக்கரசு, உதவி தோட்டக்கலை அலுவலர் திரு ஜேசுதாஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டு துறை துறை ரீதியான மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர், பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு சரவணன் உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு திருப்பதி, திரு சண்முகம்  ஆகியோர்கள் செய்திருந்தனர்.


இப்பயிற்சியில் கால்நடை உதவியாளர் திரு ராஜேந்திரன் உட்பட 40 விவசாயிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies