தருமபுரி மாவட்ட மலை கிராமங்களில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி மாலை நேர பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் திருநாளில் அவர்களை பாராட்டி மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது. தருமபுரி மாவட்டம் பொம்மிடி எஸ் எஸ் அப்பேரல்ஸ் நிறுவனத்தின் சார்பாக மேலங்கிகளை மை தருமபுரி அமைப்பிற்கு வழங்கினர்.
இந்த மேலங்கிகளை தருமபுரி மாவட்டத்தில் மலை கிராம பள்ளி மாணவர்களுக்கு மை தருமபுரி அமைப்பின் சார்பாக வழங்கி வருகிறது, எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் சார்பாக தமிழகத்தில் 250 மகாத்மா காந்தி மாலை நேர பாடசாலை நடத்தப்படுகிறது. பாலக்கோடு பகுதி சீராண்டபுரம், கரகூர் பகுதி மாணவர்களுக்கு மேலங்கி, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பியூவிஷன் நிர்வாக இயக்குனர் பசல் ரஹ்மான் கலந்து கொண்டார்.
மை தருமபுரி அமைப்பின் சார்பாக சதீஸ் குமார் ராஜா, தமிழ்செல்வன், ஹரிணி ஸ்ரீ, விஜயக்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர்.

