தருமபுரி அரசு கலைக்கல்லூரி எதிரில் மன நலம் பாதிக்கப்பட்ட 25 வயது மதிக்கத்தக்க பெண் சாலையில் சுற்றி வருவதாக மை தருமபுரி அமைப்பிற்கு தகவல் தந்தனர். உடனடியாக தருமபுரி மீட்பு அறக்கட்டளை சமூக சேவகர் பாலச்சந்தர் அவர்களிடம் தெரிவித்து அந்த பெண்ணை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் உள்ள மனநல காப்பகத்திற்கு பத்திரமாக சேர்க்கப்பட்டார்.
இவரிடம் விசாரித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த பெண்ணை மீட்பதற்கு தருமபுரி நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுசீந்திரன் அவர்கள் உதவி செய்தார். தருமபுரி மாவட்டத்தில் இதுபோன்றவர்களை மீட்டு சாலையோர ஆதரவற்றோர் இல்லாத மாவட்டமாக மாற்ற மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவும்.

