Type Here to Get Search Results !

தமிழகத்தில் முதல் முறையாக ஒகேனக்கலில் கேப்டன் விஜயகாந்த்-க்கு சிலை.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் தனியார் விடுதி வளாகத்தில் தேமுதிக நிறுவன தலைவரும் முன்னாள் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மார்பளவு சிலை நிறுவப்படுகிறது.


கேப்டன் விஜயகாந்த் சினிமா நடிகராக இருந்தபோது ஒகேனக்கலில் வைதேகி காத்திருந்தாள், கரிமேட்டு கருவாயன், சிறையில் பூத்த சின்ன மலர், செந்தூரப்பூவே பெரிய மருது உட்பட ஒகேனக்கலில் 17 படங்களில் நடித்து உள்ளார். மேலும் ஒகேனக்கல் பகுதியில் விஜயகாந்துக்கு நட்பு ரீதியாகவும், பரிசல் மற்றும் மசாஜ் தொழிலாளர்கள் ரீதியாகவும் தொடர்புகள் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.


ஒகேனக்கல் ஊட்டமலை பகுதிகளில்  இறப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார். அதனைப் நினைவுபடுத்தும் விதமாக நாளை ஒகேனக்கலில் தேமுதிக மாநில அவைத்தலைவர் மருத்துவர் இளங்கோவன் தலைமையில், தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் விஜய சங்கர், கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், அவை தலைவர் உதயகுமார் முன்னிலையில் கேப்டன் விஜயகாந்த்-க்கு மார்பளவு சிலை நிறுவப்பட்டு திறப்பு விழா நடைபெற உள்ளது இதைத்தொடர்ந்து தேமுதிக சார்பாக  500 பேர் மொட்டை அடித்து ஈமச்சடங்கில் ஈடுபடுகின்றனர். 


மேலும் 3000 பேருக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள் உட்பட யாராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பென்னாகரம் பேரூராட்சி கவுன்சிலர் பி.கே.குமார் செய்து வருகிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies