Type Here to Get Search Results !

கடந்த 2023 -ம் வருடத்தில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக வாகன சோதனை மூலம் மொத்தம் ரூ.3,25,19,015/- வசூல்.


தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2023 முதல்டிசம்பர் 2023 வரை 12 மாதங்களில் போக்குவரத்து துறையின் சார்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் த.தாமோதரன் தலைமையில், தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் அ.க.தரணீதர், பாலக்கோடு பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கு.வெங்கிடுசாமி, அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அதில், ஏறத்தாழ 25000 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 7130 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக காலாண்டு வரி செலுத்தாமல் இயக்குதல், தகுதிச்சான்று, காப்புச்சான்று, புகைச்சான்று புதுப்பிக்காமல் இயக்குதல், அனுமதி சீட்டு இல்லாமல் இயக்குதல் போன்ற குற்றங்களுக்காக 676 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. மேலும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக 233 வாகனங்களுக்கும், அதிக பாரம் ஏற்றிச்சென்ற 92 வாகனங்களுக்கும், அனுமதீச்சீட்டு இல்லாமல் இயக்கிய 145 வாகனங்களுக்கும், அதிவேகமாக வாகனங்களை இயக்கிய 4245 வாகனங்களுக்கும், தகுதிச்சான்று பெறாமல் இயக்கிய 371 வாகனங்களுக்கும், காப்புச்சான்று/புகைச்சான்று இல்லாமல் இயக்கிய 998 வாகனங்களுக்கும், சிகப்பு நிற பிரதிபலிப்பான் இல்லாமல் இயக்கிய 585 வாகனங்களுக்கும் மற்றும் சிகப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கிய 334 வாகனங்களுக்கும் வாகன தணிக்கையின் பொழுது அபராதம் விதிக்கப்பட்டது.


மேற்கண்ட வாகன சோதனையின் மூலமாக அரசுக்கு சாலை வரியாக ரூ.1,22,19,580/- (ஒரு கோடி இருபத்தி இரண்டு லட்சத்து பத்தொன்பதாயிரத்து ஐநூற்று எண்பது மட்டும்) மற்றும் இணக்க கட்டணமாக ரூ.83,04,950/- (எண்பத்து மூன்று லட்சத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது மட்டும்) ஆக மொத்தம் ரூ.2,05,24,530/- (ரூபாய் இரண்டு கோடியே ஐந்து லட்சத்து இருபத்து நான்காயிரத்து ஐநூற்று முப்பது மட்டும்) உடனடியாக வசூலிக்கப்பட்டது. மேலும், இந்த வாகன சோதனை மூலம் பல்வேறு குற்றங்களுக்கு இணக்க கட்டணமாக ரூ.1,19,94,485/- (ஒரு கோடியே பத்தொன்பது லட்சத்து தொண்ணூற்று நான்காயிரத்து நானூற்று எண்பத்து ஐந்து மட்டும்) நிர்ணயம் செய்யப்பட்டது. 


கடந்த 2023 -ம் வருடத்தில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக அரசுக்கு வாகன சோதனை மூலம் மொத்தம் ரூ.3,25,19,015/- (ரூபாய் மூன்று கோடியே இருபத்தைந்து லட்சத்து பத்தொன்பதாயிரத்து பதினைந்து மட்டும்) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், தொப்பூர்மலைப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட வேகவரம்பான 30 கி.மீ. மேல் இயக்கப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் வேகம் கண்காணிக்கும் கருவி (Speed Radar Gun) உதவியுடன் கடந்த 2 1/2 ஆண்டுகளில் 11,960 வாகனங்களுக்கு e-Challan மூலம் ரூ.86,12,425/- (ரூபாய் எண்பத்து ஆறு லட்சத்து பன்னிரண்டாயிரத்து நானூற்று இருபத்தைந்து மட்டும்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.த.தாமோதரன் அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies