Type Here to Get Search Results !

நில அளவை மற்றும் நிலவரித்திட்டத்துறைக்கு தனியாக இணையதளம் மற்றும் "தமிழ்நிலம்" செயலி.


தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்டத்துறை உருவாக்கியுள்ள www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் "தமிழ்நிலம்" செயலி மூலம் நிலஅளவைத் தொடர்பான விவரங்களை பெறலாம்.

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல் இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்டத்துறை www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது. 


அதில் பட்டா மாறுதல் "தமிழ்நிலம்" கைப்பேசி செயலி இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணைய வழி சேவை Tamil Nilam Citizen portal https://tamilnilam.tn.gov.in/citizen/ இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரிவரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த தமிழ்நிலம்(ஊரகம்) மற்றும் தமிழ்நிலம்(நகரம்) மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டு வர ஏதுவாக கொலாப்லேண்ட் மென்பொருள் உருவாக்கப்பட்டு இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


பட்டா/சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க, அபதிவேடு, அரசு புறம்போக்கு நிலவிவரம், புலப்படம்/நகர நில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறியும் எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவை (www.eservices.tn.gov.in) இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப்பட்டியல்கள் விவரங்கள் (correlation statement) பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள் வட்டங்கள் கிராமங்கள் மாநகராட்சிகள் நகராட்சிகளின் விவரங்கள், இத்துறையின் முக்கிய அரசாணைகள், சுற்றறிக்கைகள், பரப்பளவு மற்றும் அளவு மாற்றங்கள் போன்றவை அறியலாம். எனவே, பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் மற்றும் "தமிழ்நிலம்" செயலி மூலம் நிலஅளவைத் தொடர்பான விவரங்களை பார்வையிட்டு பயனடையுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies