பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வரும் அரசு பிவ/மிபிவ/ சீம நல விடுதிகளுக்கு முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில் விடுதி பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கென ஒவ்வொரு ஆண்டும் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணிகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வரும் விடுதிகளில் 2023-24 ஆம் ஆண்டிற்கான சிறப்பு பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.131.70 இலட்சம் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து,
- அரசு பிவ நல பள்ளி மாணவியர் விடுதி, நரிப்பள்ளி,
- அரசு பிவ நல பள்ளி மாணவியர் விடுதி, பொ.மல்லாபுரம்,
- அரசு பிவ நல பள்ளி மாணவியர் விடுதி, அனுமந்தபுரம்,
- அரசு மிபிவ நல பள்ளி மாணவியர் விடுதி, மொரப்பூர்,
- அரசு மிபிவ நல பள்ளி மாணவியர் விடுதி, பென்னாகரம்,
- அரசு மிபிவ நல பள்ளி மாணவியர் விடுதி, சோலைக்கொட்டாய்,
- அரசு மிபிவ நல பள்ளி மாணவியர் விடுதி மாங்கரை,
- அரசு மிபிவ நல பள்ளி மாணவியர் விடுதி மாட்லாம்பட்டி
ஆகிய 08 விடுதிகளில் தண்ணீர் வசதி. மின்சார உபகரண பராமரிப்பு பணி, கதவு ஜன்னல்கள் சீரமைத்தல், சமையலறை பழுதுகள், விடுதி கட்டடங்களுக்கு வெள்ளையடித்தல், வர்ணம் பூசுதல் மற்றும் இதர பழுதுகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
.gif)
