ஜனவரி 26ல் திருச்சிராப்பள்ளியில் நடைபெறும் வெல்லும் சனநாயக மாநாட்டிற்கு தர்மபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் அரூர் பாபிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மகளிர் அணியினர் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும் இம்மாநாட்டில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜீனகார்கே மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
எனவே திருச்சி மாநாட்டிற்கு வருகை தரும் மகளிர் அணியினர் ஜன 26ம் தேதி காலை 10 மணிக்கு கச்சேரிமேடு அம்பேத்கர் சிலை அருகே வரவேண்டும் என மாவட்ட செயலாளர் உத்தரவிட்டுள்ளார், ஆகவே மகளிர் அணியினர் அனைவரும் ஓரணியில் திரண்டு இம்மாநாடு வெற்றி பெற வைக்கவேண்டும் தருமபுரி கிழக்கு மாவட்ட மகளிரணியினர் ஏரளானோர் கலந்து கொள்ள வேண்டும் என தனது அறிக்கையில் மகளிரணி மாவட்ட துணை செயலாளர் பத்மாமாரியப்பன் கூறியுள்ளார்.
.gif)

.jpg)