பென்னாகரத்தை அடுத்துள்ள சின்னபள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு வாக்குச்சாவடி மைய அலுவலரும் தலைமை ஆசிரியருமான மா. பழனி தலைமையில் நடைபெற்றது.
ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக திகழும் வாக்காளர்கள், ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலை நிறுத்துவோம் என்றும் ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித அச்சமின்றியும் மதம் இனம் சாதி சமூக தாக்கம் இன்றியும் அல்லது வேறு ஏதேனும் தூண்டுதல்கள் இன்றியும் வாக்களிப்போம் என்றும் இதனால் உறுதியளிக்கிறோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் பிரியா, வாக்குச் சாவடி அலுவலர் அம்பிகா, கிராம உதவியாளர் சக்தி, ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி, ரேக்கா, ராஜேஸ்வரி மக்களை தேடி மருத்துவ பணியாளர் ரம்யா, சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.gif)

