Type Here to Get Search Results !

பாலக்கோடு ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம், ஒன்றிய குழு சேர்மன் பாஞ்சாலை  கோபால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ஜெகதீஷ் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வரவு செலவு கணக்குகளை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இந்த கூட்டத்தில் கோடை காலம் துவங்க உள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி ஒகேனக்கல் குடிநீர் சீராக வினியோகம் செய்யவும், குடிநீர் பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் மாற்று ஏற்பாடு செய்து வழங்கவும், கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அது தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  ஒன்றிய  கவுன்சிலர்கள் அழகுசிங்கம், முத்துசாமி, ஜோதி, சரண்யா, உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies