இதில் மாவட்ட ஆட்சியர் திருமதி கே சாந்தி இ ஆ ப அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுவாமி விவேகானந்தரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்சில் ராஜ்குமார் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு தாமோதிரன் மோட்டார் வாகன ஆய்வாளர் தரனி மாவட்ட இளைஞர் மற்றும் விளையாட்டு அலுவலர் திருமதி சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் சந்திர சேகரன் தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் தீர்த்தகிரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் பாலமுருகன் தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் 500க்கும் மேற்ப்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் நேரு யுவ கேந்திராவின் இளைஞர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் தலைமையில் செய்திருந்தது குறிப்பிடதக்கது ஆகும்.
.gif)

