மேலும் நிகழ்ச்சியின் தலைமை உரை ஆற்றிய மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் முனைவர் பழனியப்பன் இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களுக்குஎல்லாம் முன்னோடியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் அவர்கள் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார் என சிறப்பு உரையாற்றினார்.
மேலும் திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார். இது போன்ற திட்டங்கள் இந்தியாவில் உள்ள எந்த மாநிலங்களிலும் வழங்கப்படவில்லை. அதனால் இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களுக்கு எல்லாம் முன்னோடியாக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் சமத்துவமாக, சகோதரத்துவமாக வாழ வேண்டும் என்பதற்காகவே, திமுக ஆட்சியில் தலைவர் கலைஞர் சமத்துவபுரம் உருவாக்கினார் என தெரிவித்தார். முன்னதாக கூட்டத்தில் மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு திமுக சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சந்தர் வரவேற்புரையாற்றிய நிலையில் மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட துணை செயலாளர் ஆமணி, மாவட்ட பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், அரசு வழக்கறிஞர் முருகன் ,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பாபு (எ) முத்து ஜா குட்டி(எ) மோகன், ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், பஞ்சப்பள்ளி அன்பழகன், வழக்கறிஞர் கோபால், கிருஷ்ணன், அடிலம்அன்பழகன், மாரண்ட அள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் மனோகரன், ஒன்றிய துணைச் செயலாளர் ரவி மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர், பேரூராட்சி துணைத் தலைவர் தஹசினா இதாயத்துல்லா, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் புனிதா, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஒன்றிய மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இறுதியாக மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரபு நன்றி உரையாற்றினார்.
.gif)


