தருமபுரி மாவட்டம் எண்ணங்களின் சங்கமம் சார்பாக மலை கிராமங்களில் மாணவர்களுக்கு மகாத்மா காந்தி மாலை நேர பாடசாலை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பாடசாலைகளுக்கு மேலங்கி, கல்வி உபகரணங்கள் வழங்கி வருகின்றனர். பாப்பாரப்பட்டி பகுதியில் உள்ள பாலவாடி, பிக்கிலி,மலையூர் கிராமங்களில் உள்ள மகாத்மா காந்தி மாலை நேர பாடசாலை மாணவர்களுக்கு மை தருமபுரி அமைப்பின் சார்பாக மேலங்கிகள், கல்வி உபகரணங்கள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் எண்ணங்களின் சங்கமம் நிறுவனர் பிரபாகரன் ஐயா அவர்களுக்கும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். பாடசாலை ஆசிரியர்கள் முனிராஜ், நவீன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். சிறப்பு விருந்தினராக பியூவிஷன் நிர்வாக இயக்குனர் உதயகுமார் சின்னசாமி அவர்கள் கலந்து கொண்டார்.
மேலங்கிகள் வழங்கிய பொம்மிடி எஸ்எஸ் அப்பரேல்ஸ் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.மை தருமபுரி அமைப்பின் சார்பாக நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, தமிழ்செல்வன், மருத்துவர் முஹம்மத் ஜாபர் ஆகியோர் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர்.
.gif)

