கல்லூரி முதல்வர் முனைவர் கோ கண்ணன் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார் முன்னதாக வேதியியல் துறை தலைவர் முனைவர் ரா கிருபாகரன் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார் நாகப்பட்டினம் கலிலியோ வாசன் ஆஃப் ஷோர் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் திரு சீனிவாசன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக வேதியியல் துறை மாணவர்கள் தொழில்துறை பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு பெற உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.
மேலும் பெட்ரோலியம் துறையில் வேதியியல் மாணவர்களுக்கு உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி விரிவுரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் வேதியியல் துறை பேராசிரியர்கள் முனைவர் மு வெண்ணிலா முனைவர் கா வெங்கடாசலம் முனைவர் பாலகிருஷ்ணன் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர் மேலும் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
.gif)

