Type Here to Get Search Results !

கோடியூர் கிராமத்தில் குறவன் மக்கள் நல சங்க தலைவர் மறைவுக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கோடியூர் கிராமத்தில் குறவன் மக்கள் நல சங்க தலைவர் மறைவுக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாநில இணைசெயலாளர் திருப்பதி தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில இளைஞர் அணி செயலாளர் மாது முன்னிலை வகித்தார். கடந்த 13ம் தேதி உடல் நல குறைவால் உயிரிழந்த  குறவன் மக்கள் நல சங்க தலைவர் கும்பகோணம் முருகேசன் அவர்களின் உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து, மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தினர்.


இந்நிகழ்ச்சியில் குறவன்  மக்கள் நல சங்கத்தை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies