இந்த விழா கடந்த 22ம் தேதி கொடியேற்றி கணபதி பூஜையுடன் தொடங்கியது. அதிகாலை திருப்பள்ளியெழுச்சி, மங்கள இசை, திருச்சுற்றுக் கலச நீராட்டு, ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல், நான்காம் கால வேள்வி, பேரொளி வழிபாடு, பூர்ணாஹநிதி நடந்தது. இதனையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தத்தை பட்டாச்சியர்கள், ஊர் கவுண்டர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் திருக்குட நன்னீராட்டு செய்து தீபாரதனை காட்டினார். பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இதனையடுத்து ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. அம்மன் சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி காலை முதல் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.
.gif)


