அரூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது, முன்னதாக சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் இந்திராணிதனபால் துணை தலைவர் சூர்யாதனபால் ஆகியோர் தலைமையில் பொங்கல் வைத்து வழிபட்டனர் பின்னர் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் நியமன குழு உறுப்பினர் முல்லைரவி. செயல் அலுவலர் ம.விஜயசங்கர் துப்புரவு ஆய்வாளர் புவனேஸ்வரி பேரூராட்சி உறுப்பினர்கள் அருள்மொழி ஜெயலஷ்மிவெங்கடேசன் பெருமாள் அன்பழகன் பூபதி சரிதா நிர்வாகிகள் முஜீப் கணேசன் சூர்யாவெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.