தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருராட்சி சார்பில் புகையிலா பொங்கல் விழா பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா முன்னிலை வகித்தார், பேரூராட்சி வளாகத்தில் புது பானையில் பொங்கல் வைத்து, செங்கரும்புடன் மஞ்சள் வைத்து சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்து பொங்கலோ , பொங்கல் என்று ஆரவாரம் முழங்க புகையிலா பொங்கல் விழா சிறப்பாககொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன்,,வார்டு கவுன்சிலர்கள் சரவணன், மோகன், ஜெயந்திமோகன், சிவசங்கரி, பிரியா குமார், ரூஹித் அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் திரளாக கலந்து கொண்டார், இறுதியில் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.