தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி மகா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை மூலமாக ஏழை குழந்தைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகிறது. ஸ்ரீ தேவி மகா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப் பள்ளியில் உள்ள ஆதரவற்ற தாய் தந்தையை இழந்த 30 குழந்தைகளுக்கும் புத்தாடை வாங்கி கொடுத்து அத்துடன் இனிப்புகள் வழங்கி அவர்களுடன் கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் ஸ்ரீ தேவி மகா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் சார்பில் தேவகி,அன்பரசு மற்றும் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்
ஸ்ரீ தேவி மகா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை வழங்கினர்.
ஜனவரி 14, 2024
0
Tags

