தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் வளாகத்தில் மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களின் ஆணை படியும், தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன். அவர்களின் அறிவுறுத்தல் படியும் திமுக பேரூர் கழக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் பேரூர் கழக செயலாளர் எம்.ஏ.வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது.
கூட்டத்திற்க்கு நகர அவைத் தலைவர் செங்கல் மணி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் சேலத்தில் வரும் 21ம் தேதி நடைபெற உள்ள 2- வது இளைஞரணி மாநில மாநாடு குறித்தும், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் களப்பணிகள் முன்னேற்பாடு குறித்தும், மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனைக் மேற்கொள்ளப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேரூர் கழக துணை செயலாளர்கள் சகிலா, மாதையன், வசிஷ்டர், பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் சுரேஷ், பன்னீர்செல்வம், ஒன்றிய பிரதிநிதிகள் மார்கண்டன், .குமார், செல்வம், பாரதி, கிருஷ்ணகுமார், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் யதிந்தர், மீணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜோதிவேல், மற்றும் கிளை கழக செயலாளர்கள், கவுண்சிலர்கள், நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

