தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி காவல்நிலையம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்ஸ்பெக்டர் சுப்ரமணி அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இதில் பாலக்கோடு உட்கோட்ட டி.எஸ்.பி. சிந்து அவர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் போலீசார் பாரம்பரிய முறையில் வேட்டி, சேலை அணிந்து புது பானையில் பொங்கல் வைத்து, செங்கரும்புடன் மஞ்சள் வைத்து சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்து பொங்கலோ, பொங்கல் என்று ஆரவாரம் முழங்க பொங்கல் விழாவினை சிறப்பாககொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள், நிலைய எழுத்தர் தினேஷ்,ன் மற்றும் போலீசார் மற்றும் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.

