நிகழ்ச்சிக்கு ஹாக்கி யூனிட் ஆப் தருமபுரி முதன்மை தலைவர் ரங்கநாதன், செயலாளர் குமார், பொருளாளர் முனியப்பன், துணை தலைவர்களான மாரண்டஅள்ளி காவல் நிலைய SP CID சரவணன், குமரன், உதவி ஆய்வாளர் கண்னன் மற்றும் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் சிந்து அவர்கள் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்கு வெற்றி பெற வாழ்த்து கூறி முதல் பந்தை அடித்து போட்டியினை துவக்கி வைத்தார். இப்போட்டியில் தருமபுரி பாலக்கோடு, பேளாரஅள்ளி, நரிப்பள்ளி உள்ளிட்ட 12 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கப்பட உள்ளது. மேலும் வெற்றி பெறும் அணிகள் அடுத்து நடைபெற உள்ள மாநில போட்டியில் பங்கு பெற தகுதி பெறும் என தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பிணர் மாதப்பன், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் மாரியப்பன், வெங்கட்டன், வஜ்ஜரவேல், சப்.இன்ஸ்பெக்டர் சரவணன், முன்னாள் மாவட்ட விளையாட்டு அதிகாரி ரகுநாதன், ஜூனியர் இந்திய பயிற்சியாளர் உதயகுமார், ரமேஷ், தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.gif)


