தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியம் நவலை ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு அறிவுத்திறன் வளர்க்கும் பயிற்சியில் வாய்ப்பாடு ஒப்பிவித்தல், அப்துல்கலாம் கவிதைகள், போன்ற போட்டிகள் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பாடு, தேர்வு அட்டை, பென்சில், பாக்ஸ், போன்ற கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் D.அண்ணாமலை, K.தளபதி ராம்குமார் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற சங்கத்தின் நிர்வாக தலைவர் நா. சின்னமணி பள்ளி மாணவ மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.