Type Here to Get Search Results !

பாலக்கோடு ஸ்ரீராம் சில்க்கில் பொங்கல் அதிரடி பரிசாக தலா 1 இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஸ்கூட்டி வென்ற மூன்று வாடிக்கையாளர்கள்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு எம்.ஜி.ரோட்டில் உள்ள ஸ்ரீராம் சில்க் ஜவுளி கடையில் பொங்கல் தை திருநாளை முன்னிட்டு டிசம்பர் 20 ம் தேதி முதல் ஜனவரி 20 தேதி வரை ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஜவுளி வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கூப்பன் வழங்கப்பட்டு அதில் மூன்று அதிர்ஷ்டசாலிக்கு அதிர்ஷ்ட பரிசாக தலா 3 நபருக்கும்  சுமார் 1 இலட்சம்   ரூபாய் மதிப்பிலான ஸ்கூட்டி வழங்குவதாக ஸ்ரீராம் சில்க்ஸ்  கே.ஜி.எம்.நிறுவனம் அறிவித்திருந்தது.


அதனை தொடர்ந்து இன்று  குலுக்கல் முறையில் மூன்று  அதிர்ஷ்டசாலிகளை  தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி துனிக்கடை வளாகத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு கே.ஜி.எம். குழும ஸ்தாபகர் டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் டாக்டர்.மோகன பிரியா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.


இதில் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்டதில் காவப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராணி(35), கோட்டூர் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார்(30), எலங்காளப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (23) ஆகிய மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள்,  பாலகிருஷ்ணன், மோகன பிரியா, கே.ஜி.எம்.குழும கெளரவ தலைவருமான  கே.ஜி.மாதையன் ஆகியோர் புதிய டிவிஎஸ் ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தை மூவருக்கும் பரிசாக வழங்கினர்.


இந்த நிகழ்ச்சியில்  ஸ்ரீராம் சில்க் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன்  அனைவருக்கும்  நன்றி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies