எண்ணங்களின சங்கமம் NDSO அமைப்பின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தில் மகாத்மா காந்தி மாலை நேர பாட சாலை நடத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மை தருமபுரி அமைப்பின் சார்பாக மேலங்கி, ஸ்கேல், பென்சில், பேனா போன்ற கல்வி உபகரணங்களை பொங்கல் திருநாளை முன்னிட்டு வத்தல்மலை கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி மாலை நேர பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் பாடசாலை ஆசிரியர் கவிதா ஒருங்கிணைத்தார். எண்ணங்களின சங்கமம் ஒருங்கிணைப்பாளர் V4U பிரகாஷ் தலைமை தாங்கினார். மை தருமபுரி அமைப்பின் சார்பாக சதீஸ்குமார் ராஜா, தமிழ்செல்வன், முஹம்மத் ஜாபர், ஹரிணி ஸ்ரீ ஆகியோர் கல்வி உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி அவர்களது கல்வியை ஊக்குவித்து பாராட்டினர்.

