தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் தருமபுரி மாவட்டத்தில் அரசு சிறப்பு பள்ளிகளான பார்வைத்திறன் குறையுடையோருக்கான தொடக்கப் பள்ளி மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான மேல் நிலைப்பள்ளி ஆகியவை இயங்கி வருகிறது.
செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள கணித பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மற்றும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப் பள்ளியில் இரண்டு இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கீழ்காணும் கல்வித் தகுதியுடன் முற்றிலும் தற்காலிகமாகவும், மதிப்பூதியம் அடிப்படையிலும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் உள்ள குழுவின் மூலம் நிரப்பிடும் பொருட்டு மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
|
வ. எண். |
பள்ளியின்
பெயர் |
காலியாக
உள்ள ஆசிரியர் பணியிடங்கள் |
கல்வி
தகுதிகள் |
மதிப்பூதியம் ரூ. |
|
1. |
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப் பள்ளி, தருமபுரி |
இடைநிலை ஆசிரியர்
(2)
காலிப்பணியிடம் |
இளநிலை
பட்டயப் படிப்பு (Junior
Diploma in Teaching The Blind) அல்லது D.Ed (Special Education
for VI) |
12000 |
|
2. |
செவித்திறன்
குறையுடையோருக்கான மேல் நிலைப்பள்ளி, தருமபுரி |
கணிதப்
பட்டதாரி ஆசிரியர்
(1) காலிப்பணியிடம் |
முதுநிலை
பட்டயப் படிப்பு
(Senior Diploma in Teaching The Deaf) அல்லது B.Ed (Special Education
for HI) |
15000 |
.gif)

