ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தருமபுரி ஒன்றியத்தைச் சார்ந்த புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நகராட்சி நடுநிலைப்பள்ளி கோட்டை உருது பள்ளியில் 9.1.2024 அன்று நடைபெற்றது. இப்பயிற்சியில் 110 மையங்களில் பணியாற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு (NILP) புதிய பாரத எழுத்தறிவு திட்ட கட்டகங்களைப் பயன்படுத்தி கற்போருக்கு வகுப்பு எடுக்கும் உக்திகள் மற்றும் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை கையாளும் முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை மாநில இணை இயக்குநர் பொன்குமார் பார்வையிட்டு அனைத்து தன்னார்வலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கினார். ஒவ்வொரு மையத்திற்கும் கற்போரின் எண்ணிக்கைக்கேற்ப சிலேட்டுகள் நோட்டுப் புத்தகங்கள் பென்சில்கள், மற்றும் பல்பங்கள் வழங்கப்பட்டன.
இப்பயிற்சியினை தருமபுரி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கவிதா முன்நின்று நடத்தினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் பானு ரேகா மற்றும், ஆசிரியர் பயிற்றுநர் பரிதா பானு ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர், பயிற்சியில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு மதிய உணவு, தேநீர் மற்றும் பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட்டன.