தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் காட்டம்பட்டி ஊராட்சியில் உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தமிழக அரசு வழங்க கூடிய பொங்கல் பரிசு தொகுப்பான செங்கரும்பு, சர்க்கரை, பச்சரசி மற்றும் 1000 ரூபாய் பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சியினை பாலக்கோடு ஒன்றிய கவுன்சிலர் முத்தப்பன் தலைமைதாங்கி பரிசு தொகுப்பினை பொது மக்களுக்கு வழங்கி தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்சியில் காட்டம்பட்டி ஊர் கவுண்டர் மந்திரி கவுண்டர், நியாய விலை கடை அலுவலர் சதீஷ், திமுக கிளை செயலாளர்கள் ஆனந்த், குள்ளம்மாள், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் தங்கவேல் மற்றும் ஊர் திரளாக கலந்து கொண்டனர்.