தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியில் கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு மாங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் மகன் தாமு (28) ஆலமரத்துப்பட்டியில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையை கடந்த ஐந்து வருடங்களாக நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 25 ஆம் தேதி இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார் இவருடைய இரு சக்கர வாகனத்தை கடை முன் நிறுத்திவிட்டு சென்றுள்ளார் மீண்டும் அடுத்த நாள் வழக்கம்போல் திறக்க வந்துள்ளார் கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
பின்னர் கடையில் உள்ள சிசிடிவி காட்சி ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் இவருடைய இருசக்கர வாகனத்தை நைசாக தள்ளி சென்றது தெரியவந்தது இது குறித்து பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சிசிடிவி காட்சிகளை வைத்து இருசக்கர வாகன திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
.gif)

