இதையடுத்து தர்மபுரி மாவட்டம் நரிப்பள்ளியில் அனைத்து வாகன ஓட்டுனர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஓட்டுநருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் ஓட்டுநர் விபத்தில் இறந்தால் அல்லது இயற்கை மரணம் ஏற்பட்டால் ஓட்டுனர் குடும்பத்திற்கு அரசு ஒரு லட்சம் மத்திய அரசு ஒருலட்சம் தர வழிவகை செய்திட வேண்டும் ஓட்டுநர் பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும் ஓட்டுநர் கையொப்பம் இல்லாமல் ஆன்லைன் கேஸ் போடும் சட்டத்தை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநில பொதுசெயலாளர் செந்தில்குமார், மாநில பொருளாளர் குமார், மாநிலதுணை பொருளாளர் அரிகிருஷ்ணன், தர்மபுரி மாவட்ட தலைவர் குப்புசாமி, நரிப்பள்ளி ஓட்டுநர்கள் சங்க தலைவர் சம்பத், செயலாளர் சிரஞ்சீவி, பொருளாளர் முருகன், துணைத் தலைவர் ரியாஸ், துணை பொருளாளர் சென்னகிருஷ்ணன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

