Type Here to Get Search Results !

சீங்காடு கிராமத்தில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே  சீங்காடு  கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் கணபதிஊராட்சி மன்ற தலைவர் சுப்ரமணி  தலைமையில் இன்று நடைப்பெற்றது.


இம்முகாமிற்க்கு கால்நடை மண்டல இணை இயக்குநர் டாக்டர் சுவாமிநாதன், கால்நடை  பராமரிப்பு துறை உதவி இயக்குநர்கள் டாக்டர் . மணிமாறன், டாக்டர் .சண்முகம்சுந்தரம் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இம்முகாமில்  கால்நடை உதவி மருத்துவர்கள் தியாகசீலன், முத்து ஆகியோர்  கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல் குறித்து செயல் விளக்கம்  செய்து காட்டினார்.


மேலும் கன்றுகுட்டிகள்  மற்றும் ஆடுகள் ஆகியவற்றிற்கு  மூன்று மாதங்களுக்கு  ஒரு முறை  வெறும் வயிற்றுடன் அதிகாலையில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஒரே மருந்தை கொடுக்காமல் மாற்றி தருவது அவசியம் என எடுத்துரைத்தனர். இம்முகாமில் கால்நடைகளின் ரோமத்தில்  உண்ணி, பேன், தெள்ளுபூச்சி ஆகிய புற ஒட்டுண்ணிகளை நீக்கம் செய்ய ஐவர்மெக்டின் மருந்தை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 


மேலும் கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்தல், சினை பரிசோதனை செய்தல், மலடு நீக்க  சிசிச்சை அளித்தல், தாது உப்பு கலவை வழங்குதல், தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து கன்றுகுட்டிகள் பேரணி நடைப்பெற்றது, இதில் சிறந்த 5 கிடாரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதே போல் கால்நடை வளர்ப்பில் சிறந்த மேலாண்மைக்கான சான்றிதழ்கள் 3 கறவைபசு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.


இம்முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கு தேவையான லிவர்டானிக், வைட்டமின் சி,டானிக், பூச்சி மருந்துகள் ஆகியவை  வழங்கப்பட்டது. இம்முகாமில் கால்நடை ஆய்வாளர் கிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்  வேனுகோபால், வார்டு உறுப்பிணர்கள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies