Type Here to Get Search Results !

சிறப்பு பொங்கல் பரிசு குறித்து குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்களை அறிவித்த மாட்ட ஆட்சியர்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, தமிழர் திருநாள் தைபொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்புகளை பெறுவதற்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தருமபுரி மாவட்டம், ஏர்ரப்பட்டியில் இன்று தொடங்கி வைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, தமிழர் திருநாள் தைபொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்புகளை பெறுவதற்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தருமபுரி மாவட்டம், ஏர்ரப்பட்டியில் இன்று (07.01.2024) தொடங்கி வைத்தார்கள்.


பின்னர், இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, தமிழர் திருநாள் தைப்பொங்கல் 2024 தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் விதமான தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,67,345 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் 727 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்பட உள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொடர்புடைய நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுதலின்றி பொங்கல் பரிசினை வழங்கும் வகையில் தெருவாரியாக உள்ள தகுதியுள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 07.01.2024 முதல் 09.01.2024 வரை டோக்கன்கள் விநியோகம் செய்யும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு 10.01.2024 முதல் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக 14.01.2024 வரையில் சுழற்சி முறையில் (Staggering System) விநியோகம் மேற்கொள்ள குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டு டோக்கன்கள் விநியோகிக்கப்பட உள்ளது.


டோக்கன் வழங்குவதற்கு நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு டோக்கன்கள் வீடுதோறும் சென்று நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலம் வழங்க மாவட்ட நிர்வாகத்தால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் பணி தொடர்பாக 12.01.2024 வெள்ளிக்கிழமை அன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


மேலும் ரொக்கப்பணம் ரூ.1000/- தொகையினை ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிப்புரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பொங்கல் பரிசு குறித்து குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை உள்ளீட்ட கீழ்கண்ட தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள்

  1. 1967
  2. 1800 425 5901
  3. 044 28592828
  4. 1077
  5. 04342 233299

வட்ட அளவில் ஏதேனும் புகார்கள் தெரிவிக்க

  1. தருமபுரி -9445000217
  2. பென்னாகரம் -9445000218
  3. பாலக்கோடு -9445000219
  4. அரூர் -9445000220
  5. பாப்பிரெட்டிப்பட்டி -9445000221
  6. காரிமங்கலம் - 9445796431
  7. நல்லம்பள்ளி -9445796432

வட்ட வழங்கல் அலுவலர்களின் கைப்பேசி எண்களையும் உபயோகப்படுத்தலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


இந்நிகழ்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (பொ) திருமதி.மலர்விழி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ராஜகுரு, நல்லம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் திருமதி.பார்வதி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies