இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாலஜங்கமன அள்ளி பொது விநியோக திட்ட நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை இன்று வழங்கி துவக்கி வைத்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை ஆழ்வார்பேட்டை டி.யூ.சி.எஸ் நியாய விலைக்கடையில் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிடும் பொருட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பினை இன்று வழங்கி துவக்கி வைத்தார்கள். இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாலஜங்கமன அள்ளி பொது விநியோக திட்ட நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புகள் மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை இன்று (10.01.2024) வழங்கி துவக்கி வைத்தார்கள்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட 2,19,57,402 குடும்ப அட்டைதாரர்களுக்கு, பயனாளி ஒருவருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ. 1000/- ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 466 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 576 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 43 நியாயவிலைக் கடைககும் ஆக மொத்தம் 1085 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் 4,67,802 அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் இன்று முதல் தொடர்புடைய நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கப்படுகின்றது.
இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருமதி.மலர்விழி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் (தருமபுரி) திருமதி.தேன்மொழி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.ராஜகுரு, துணைப்பதிவாளர்கள் திரு.எம்.ராஜா, திரு.கார்த்திகேயன், நல்லம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் திருமதி.பார்வதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி. மாது சண்முகம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.மகேஸ்வரி பெரியசாமி, பாலஜங்கமனஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் திரு.எம்.கோவிந்தசாமி, உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.