மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க திட்டத்தின் மூலம் பொங்கல் திருநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மை தருமபுரி அமைப்பின் சார்பாக 500 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. முக்கல்நாயக்கன்பட்டி கிராம இளைஞர்கள் சார்பாக ஆயிரம் நபர்களுக்கு தித்திக்கும் பொங்கல் மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த பொங்கல் திருநாளை பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது. மை தருமபுரி அமைப்பின் சார்பாக சதீஸ் குமார் ராஜா, தமிழ்செல்வன், ஹரிணி ஸ்ரீ, முக்கல்நாயக்கன்பட்டி கிராமம் சார்பாக அறிவழகன் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

